உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுரங்க பாலத்தில் கழிவு நீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சுரங்க பாலத்தில் கழிவு நீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருப்பூர்:திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில், டி.எம்.எப்., அருகே பாலம் அமைத்துள்ளது. இந்த பாலம் அமைந்துள்ள இடத்தில் கழிவு நீர் தேக்க தொட்டி உள்ளது. நேற்று முன்தினம் இந்த தொட்டி நிரம்பிய நிலையில், வெளியேறிய கழிவுநீர் சுரங்க பாலத்தில் பெருமளவு சென்று தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.மாநகராட்சி மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ் கூறுகையில், ''கழிவு நீர் உறிஞ்சி கொண்டு செல்லும் மோட்டார் மின் இணைப்பு ஒயர், அடையாளம் தெரியாத வாகனத்தால் துண்டிக்கப்பட்டது. இதனால், தானியங்கி கருவிகள் வேலை செய்யாமல் கழிவு நீர் நிரம்பி வழிந்து பாலத்தின் கீழ் தேங்கியுள்ளது.உடனடியாக மின் இணைப்பு ஒயர்கள் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டது. கழிவு நீரும் அகற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ