உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொரவலுார் ஊராட்சியில் மகளிர் சபா சிறப்பு கூட்டம்

தொரவலுார் ஊராட்சியில் மகளிர் சபா சிறப்பு கூட்டம்

திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில் முன்மாதிரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொரவலுார் ஊராட்சியில் மகளிர் சபா கூட்டம் நடந்தது.தமிழகத்தில் மகளிர் நேய கிராம ஊராட்சி கீழ், 37 மாவட்டங்களில் இருந்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 265 ஊராட்சிகளில் தொரவலுார் ஊராட்சி முன்மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.அதன்ஒரு பகுதியாக, மகளிர் தினத்தையொட்டி மகளிர் சபா கூட்டம் தொரவலுாரில் நடந்தது. இதில், கிராமத்திலுள்ள பெண்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை கூறி, துாய்மை பாரதம் குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து, தங்கள் கோரிக்கை குறித்து தெரிவித்தனர். துாய்மையாக வேலை செய்த துாய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். பெருமாநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் யசோதா தலைமையில் முகாம் நடந்தது. வக்கீல் மகாலட்சுமி மகளிருக்கு உள்ள சட்ட பாதுகாப்பு விதிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !