உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரிந்த ஓட்டுகள் எளிதானது வெற்றி

பிரிந்த ஓட்டுகள் எளிதானது வெற்றி

திருப்பூர் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் பிரிந்து களமிறங்கியதால், எளிதாக இந்திய கம்யூ., கட்சி வென்றுள்ளதாக அரசியல் கட்சிகள் தரப்பில் கூறுகின்றனர். அ.தி.மு.க., - பா.ஜ., என, இரு கட்சியும், தி.மு.க., கூட்டணியின் ஓட்டுகளை விட அதிகம் பெற்றுள்ளது சுட்டிக்காட்டப்படுகிறது.அ.தி.மு.க., - பா.ஜ., இடையே தேர்தலுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இரு கட்சிகளும் தனித்தனி கூட்டணியாக களமிறங்கின.திருப்பூர் தொகுதியை தி.மு.க., வினரிடம், இம்முறையும் இந்திய கம்யூ., கட்சி கேட்டு பெற்று, மீண்டும் சுப்பராயன் களமிறங்கினார். அ.தி.மு.க., சார்பில், அருணாச்சலம், பா.ஜ., சார்பில், முருகானந்தம் களமிறங்கினர். மற்ற, இரு கட்சிகளை காட்டிலும், ஆரம்பம் முதலே பா.ஜ.,வினர் பல்வேறு விதமாக பிரசாரங்களை மேற்கொண்டு, வாக்குறுதிகளை அளித்து மக்களை சந்தித்தனர்.ஓட்டுப்பதிவுக்கு, இரு நாட்கள் முன்னதாக தி.மு.க., - அ.தி.மு.க., தரப்பு மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக பா.ஜ., தரப்பில் பல்வேறு புகார்கள் தெரியப்படுத்தப்பட்டது. அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று பிரதான குற்றச்சாட்டாக இருந்தது. களநிலவரம் தங்களுக்கு சாதகமாக உள்ளதாக பா.ஜ.,வினர் நம்பிக்கையில் இருந்தனர்.தேர்தல் முடிவில், பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டு, ஒரு லட்சத்து, 85 ஆயிரத்து, 322 ஓட்டுகளை மட்டுமே பெற்றார். ஆறு தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதியில், 20 ஆயிரத்துக்கு அதிகமான ஓட்டுகளை பெற்றுள்ளார். அதில், திருப்பூர் வடக்கு தொகுதியில், 45 ஆயிரத்து, 824 பெற்றார்.இந்த தொகுதியில் அ.தி.மு.க., - பா.ஜ., ஓட்டுகளைப் பிரித்துள்ளனர். இதன் காரணமாக, இந்திய கம்யூ., கட்சி எளிதாக வெற்றி பெற்று விட்டது. இரு கட்சியும் சேர்த்து, 5 லட்சத்து, 32 ஆயிரத்து, 133 ஓட்டுக்களை பெற்றனர். இது, வெற்றி பெற்ற சுப்பராயனை விட, 59 ஆயிரம் ஓட்டுக்கள் கூடுதலாகும்.''ஒன்றாக களமிறங்கியிருந்தால் திருப்பூர் தொகுதியில் வெற்றிக்கனியை பறித்து இருக்கலாம்'' என்று அ.தி.மு.க., - பா.ஜ.,வினரிடையே கருத்துகள் நிலவுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை