திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள, ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி கும்பாபிேஷக விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.திருப்பூர், காலேஜ் ரோடு ஸ்ரீஐயப்பன் கோவிலை, ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட் மற்றும் ஸ்ரீஐயப்ப பக்த ஜனசங்கம் நிர்வகித்து வருகிறது. கோவில் வளாகத்தில், கேரள பாரம்பரிய வழக்கப்படி, ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி அமைக்கப்பட்டு, நேற்று லகு கும்பாபி ேஷகம் நடைபெற்றது.கடந்த, 8ம் தேதி மகா கணபதி ேஹாமத்துடன், கும்பாபிேஷக பூஜைகள் துவங்கியது. பசு தானம், பிரசாத சுத்தி, வாஸ்து ேஹாமம், பிம்ப சுத்தி கிரியா, உஷ்ஷ பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீகிருஷ்ணர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, மகா கணபதி ேஹாமம், உஷ்ஷ பூஜை, மகப்பானியை தொடர்ந்து, கும்பாபிேஷகம் நடந்தது. சபரிமலை பிரதம தந்திரி கண்டரு மோகனரு தலைமையில், கோவில் தந்திரிகள் கும்பாபிேஷகம் மற்றும் உப தேவா கலசம் உஷ்ஷ பூஜைகள் நடத்தினர்.ஸ்ரீஐயப்பன் பக்தஜன சங்கம், ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கும்பாபிேஷக பூஜைகளை தொடர்ந்து, காலை, 10:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. லகு கும்பாபிேஷகத்தை தொடர்ந்து, 41 நாட்களுக்கு, கும்பாபிேஷக மண்டல அபிேஷக பூஜைகள் நடக்குமென, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.