உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீமாரியம்மன் - ஸ்ரீமாகாளியம்மன் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம்

ஸ்ரீமாரியம்மன் - ஸ்ரீமாகாளியம்மன் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம்

அவிநாசி : அவிநாசி வட்டம், வடுகபாளையம் கிராமம், பெரிய ஓலப்பாளையத்தில் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவில் உள்ளது. கோவில் மஹா கும்பாபிஷேக விழா ஸ்ரீ சென்னியாண்டவர் வேள்விக் குழு ஸ்ரீ விஜய் குருக்கள் முன்னிலையில் நேற்று கோலாகலமாக நடந்தது.முன்னதாக கடந்த 7ம் தேதி சிவளாபுரி அம்மன் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். முதல் கால யாக வேள்வி நடந்தது.நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி, நேற்று நான்காம் கால யாக பூஜை நடந்தது. பின், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம், தச தரிசனம், மஹா தீபாராதனை ஆகியவையும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி