உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செஞ்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு மாநில விருது

செஞ்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு மாநில விருது

பல்லடம்:சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், செஞ்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் ஆண்டு பொதுக்கூட்டம் செஞ்சேரிமலையில் நடந்தது. தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். வங்கி கோவை மாவட்ட துணை மேலாளர் திருமலை ராவ் முன்னிலை வகித்தார். செஞ்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளார் ஆசி வழங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், 'கடந்த ஆண்டு, 20 உறுப்பினர்களுடன் உழவர் உற்பத்தி நிறுவனம் துவங்கப்பட்டது. இன்று, 750 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்துக்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், நபார்டு வங்கி மூலம் சிறந்த உழவர் உற்பத்தி நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் வருவாய் கிடைத்த நிலையில், 2023--24ல் ஒன்றரை லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. மாநில விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஈஷா அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் பூபதி, ஆண்டு வரவு செலவு கணக்குகள் குறித்து எடுத்துரைத்தார். இயக்குனர் சிவகுமார் நன்றி கூறினார். ---2 படங்கள்------------செஞ்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ