உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில என்.சி.சி., முகாம் நஞ்சப்பா பள்ளி சாம்பியன் 

மாநில என்.சி.சி., முகாம் நஞ்சப்பா பள்ளி சாம்பியன் 

திருப்பூர்;மாநில என்.சி.சி., முகாமில் பங்கேற்ற, திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவர்கள், முதலிடம் பெற்று, சாம்பியன்ஷிப் கைப்பற்றினர். பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது.திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில், ஜூலை, 3 முதல், 12 வரை என்.சி.சி., மாணவர்களுக்கான மாநில அளவிலான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில், திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மாநிலம் முழுதும், 20 பள்ளிகளை சேர்ந்த, 600க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டியில், இரண்டாமிடம், 'மைம்' முதலிடம், இசை கருவி வாசித்தல் முதலிடம், ஓட்டப் போட்டி மூன்றாமிடம் உள்ளிட்ட எட்டு போட்டிகளில், வெற்றிகளை குவித்தனர். மொத்தம், 500க்கு, 406 மதிப்பெண் பெற்று, 43 சான்றிதழ்வென்று, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கண்ணன், என்.சி.சி., அலுவலர் சசிக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ