உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெரு நாய் மறுவாழ்வு மையம்அறக்கட்டளை யோசனை

தெரு நாய் மறுவாழ்வு மையம்அறக்கட்டளை யோசனை

திருப்பூர்;தெரு நாய்களால் நாளுக்கு நாள் மக்களுக்கு இடையூறு அதிகரித்து வரும் நிலையில், அவற்றை பராமரிக்க தயாராக இருப்பதாக, காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், செயலாளர் குமார் ஆகியோர், மாவட்ட கலெக்டருக்கு வழங்கியுள்ள மனு:கடந்த, 3 ஆண்டுகளுக்கும் மேலாக காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை நிறுவி, சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறோம். தற்போது, மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் தெரு நாய்கள் பெருகி வருகின்றன. நடந்து செல்வோர், டூவீலரில் செல்வோர், பள்ளிச் செல்லும் குழந்தைகள், நடைபயிற்சி மேற்கொள்வோர் என அனைவரும் தெரு நாய்கள் விரட்டுவதும், கடிப்பதும் ஆங்காங்கே நடக்கிறது.இப்பிரச்னையை தவிர்க்க, வாயில்லாத ஜீவன்களை பாதுகாத்து பராமரிக்க மறுவாழ்வு மையம் அமைக்க, அரசு நிலங்களை ஒதுக்க வேண்டும். தேவையான உபரி நிலங்களை அரசே ஒதுக்கினால், தெரு நாய்களை பராமரித்து, அவற்றால், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தயாராக உள்ளோம். இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை