உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புகை உடல் நலத்துக்கு பகை மாணவர்கள் விழிப்புணர்வு

புகை உடல் நலத்துக்கு பகை மாணவர்கள் விழிப்புணர்வு

திருப்பூர்;உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப்பணித் திட்ட அலகு - -2 சார்பில், 'புகையிலை பயன்படுத்துதலில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்' என்ற மைய கருத்தை வலியுறுத்தி, 'புகை நம் உடல் நலத்துக்கு பகை' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். அரசு டாக்டர் கலைச்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.'மாணவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. புகைபிடிப்பதால் அவர் மட்டுமில்லாமல் அவரை சார்ந்து இருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள், இதற்கு அடிமையானவர்களுக்கு புற்றுநோய், சுவாச கோளாறு மட்டுமல்லாமல் பல நோய்கள் ஏற்படுகிறது.உடல் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. மக்கள் கூடும் பகுதிகளில் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்களிடமும் இப்பழக்கத்தை தவிர்க்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், மாணவ செயலர்கள் மதுகார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, கவிபாலா, லோகேஷ்குமார், சுந்தரம், நவீன்குமார் ஆகியோர் தலைமையில், 'புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் புகை அரக்கன் போன்று வேடமணிந்து, விழிப்புணர்வு வாசகங்களை பாதகைகளாக ஏந்தி, துண்டு பிரசுரம் வினியோகித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி