உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கல்லுாரியில் கலந்தாய்வு மாணவ, மாணவியர் ஆர்வம்

அரசு கல்லுாரியில் கலந்தாய்வு மாணவ, மாணவியர் ஆர்வம்

பல்லடம்;பல்லடம் அரசு கல்லுாரியில் நடந்து வரும் கலந்தாய்வில், மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.பல்லடம் அரசு கல்லுாரியில், 2024--25ம் கல்வி ஆண்டு இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்காக, நிர்ணயிக்கப்பட்ட, 500 இடங்களுக்கு, 6,044 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.கடந்த, மே 30ல், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான சிறப்பு சேர்க்கை நடந்தது. தொடர்ந்து, பிளஸ் 2 மதிப்பெண் தரவரிசையின்படி, அனைத்து பாடங்களுக்குமான பொதுவான கலந்தாய்வு, 10ம் தேதி துவங்கியது.நேற்று, 302 முதல் 287 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு, காலை, 9.00 முதல் மதியம் 1.00 மணி வரையும், 286 -- 274 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு, மதியம், 1.30 முதல் மாலை 4.30 மணி வரையும் கலந்தாய்வு நடந்தது. பேராசிரியர் குழுவினர் மாணவர்களின் சான்றுகளை சரிபார்த்து, கலந்தாய்வில் ஈடுபட்டனர்.இன்று, தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான கலந்தாய்வும், நாளை, 273 -- 263 மதிப்பெண் பெற்றவர்களுக்கான பொது கலந்தாய்வும் நடக்க உள்ளதாக, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை