உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிரிக்கெட் வீரர் தேர்வு  மாணவர்கள் ஆர்வம்

கிரிக்கெட் வீரர் தேர்வு  மாணவர்கள் ஆர்வம்

திருப்பூர்;அவிநாசி, பழங்கரையில் நடந்த மாவட்ட கிரிக்கெட் அணி வீரர் தேர்வில், 248 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், 14 மற்றும், 16 வயது பிரிவுக்கான மாவட்ட அணி உருவாக்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் அணிக்கு பயிற்சி வழங்கி, மாவட்டத்தில் இருந்து, மாநில அளவிலான போட்டிகளுக்கு வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.அவ்வகையில், அணி வீரர் தேர்வு, பழங்கரை, அணைப்புதுார் டீ பப்ளிக் பள்ளியில் நேற்று முன்தி னம் துவங்கியது. 14 வயது பிரிவுக்கான தேர்வில், 164 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இவர்களில் இருந்து, 30 பேர் கொண்ட உத்தேச அணி தேர்வு செய்யப்பட்டது. நேற்று, 16 வயது பிரிவு அணி தேர்வில், 84 பேர் பங்கேற்றனர். இவர்களில், இருந்து, 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு வரும் மே மாதம், 1 முதல், 25ம் தேதி வரை பயிற்சியளிக்கப்படும். மே இறுதியில், உத்தேச அணியில் இருந்து, தகுதி அடிப்படையில், 16 பேர் கொண்ட இறுதி அணி உருவாக்கப்படும். இந்த அணி, மாநில போட்டிக்கு, திருப்பூர் சார்பில் பங்கேற்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை