உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கல்

மாநகராட்சி பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கல்

திருப்பூர்;ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், மாநகராட்சி பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவிக்கள் வழங்கப்பட்டது.மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், 121வது பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அவ்வகையில், தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று கல்வி வளர்ச்சி நாள் நடைபெற்றது, மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். கமிஷனர் பவன்குமார், மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியர் சரஸ்வதி வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சார்பில் அதன் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 25 ஸ்மார்ட் டிவிக்கள் வழங்கப்பட்டன. வங்கியின் மண்டல தலைவர் ஜூட் ஆண்டனி பிரகாஷ் மற்றும் பிரசாந்த் ஆகியோர் வழங்க, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்று கொண்டனர். ---திருப்பூரிலுள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சார்பில், 'ஸ்மார்ட் டிவி' வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ