உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

உடுமலை;உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நோன்பு சாட்டுதலுடன் ஏப்.,9ம்தேதி துவங்கியது.தொடர்ந்து, கம்பம் போடுதல், நேற்று முன்தினம் முக்கிய அம்சமான தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை அடுத்து நேற்று சிறப்பு அலங்காரத்தில் காலை, 8:00 மணிக்கு அம்பாளின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் குட்டைதிடலில் அம்பாளின் பரிவேட்டை நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.இன்று காலை, 10:30 மணிக்கு கொடியிறக்கம், 11:30 மணிக்கு மகாபிேஷகமும் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமிகளின் திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி