உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நேரம் ஒதுக்கி முதியோரிடம் பேசுங்கள்!

நேரம் ஒதுக்கி முதியோரிடம் பேசுங்கள்!

திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு- - 2 சார்பில், உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு என்.எஸ்.எஸ்., அலகு - 2, ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, மதுகார்த்திக் ஒருங்கிணைத்தனர். பெற்றோர், முதியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.தலைமை வகித்து, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் பேசுகையில்,''முதியோரிடம் கோபம், தகாத வார்த்தை பேசக்கூடாது. அவர்களுக்கு எதிரான கொடுமை நடந்தால் துணிந்து, தட்டி கேட்க வேண்டும். முதியோரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்துவதை ஒழிக்க வேண்டும். பஸ், மருத்துவமனை, வங்கி உள்ளிட்ட பொது இடங்களில் அவர்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும். நேரம் ஒதுக்கி முதியோர்களிடம் பேச வேண்டும்; அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், ' என்றார்.நிறைவாக,'முதியோரின் உடல் வளத்துக்கும், பாதுகாப்புக்கும் உறுதுணையுடன் இருப்பேன், கோபத்தை வெளிக்காட்டாமல் முதியோரை அன்பாக கவனிப்போம்,' என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ