உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்: பள்ளியில் மாணவர் கலைநிகழ்ச்சி

தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்: பள்ளியில் மாணவர் கலைநிகழ்ச்சி

உடுமலை;உடுமலை ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.இப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி செயலாளர் நந்தினி முன்னிலை வகித்தார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் சிறப்புகள், மாநில மலர், பறவை, விலங்கு, மரம், சின்னம் பெயர்க்காரணம் குறித்து, உயர்நிலை வகுப்பு மாணவர்கள், மற்ற மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.தொடர்ந்து, ஒயிலாட்டம், தேவராட்டம், வள்ளிகும்மி நடனம், சோழர்களின் சிறப்பு நடனம், நாட்டுபுற பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள், நக்கீரன், சிவபெருமான் உரையாடல், ஆயக்கலைகள் 64 பெயர்த்தொகுப்பு, கவிதைகளை எடுத்துரைத்தனர்.பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் சகுந்தலாமணி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ