உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில் பொங்கல் விழா தீர்த்தக்குட ஊர்வலம்

கோவில் பொங்கல் விழா தீர்த்தக்குட ஊர்வலம்

அவிநாசி : அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அவிநாசிலிங்கம்பாளையத்தில் ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 29ம் தேதி சாமி சாட்டுதல் நடந்தது.நேற்றுமுன்தினம், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா, பட்டத்தரசியம்மன் திருவீதி உலாவுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. அவிநாசிலிங்கம் பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் திருவிழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ