உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி சென்னை சில்க்ஸ் நிறுவனம்; ரூ.ஒரு கோடி கல்வி உதவித்தொகை

தி சென்னை சில்க்ஸ் நிறுவனம்; ரூ.ஒரு கோடி கல்வி உதவித்தொகை

திருப்பூர் : தி சென்னை சில்க்ஸ் நிறுவனம், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கல்வி உதவித் தொகை வழங்கியுள்ளது.தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை மற்றும் எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், அரசு பள்ளி, பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படிக்கும், 4,971 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, ஒரு கோடியே 22 ஆயிரத்து 500 ரூபாய் கல்விஉதவித் தொகை வழங்கப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், மாணவ, மாணவியருக்கு உதவித் தொகை வழங்கி, கல்வியின் சிறப்பு குறித்து பேசினார்.நிகழ்ச்சியில்,எஸ்.சி.எம்., குழுமங்களின் தலைவர் சந்திரன், நிர்வாக இயக்குனர் விநாயகம் ஆகியோர் பேசுகையில், ''எந்த செல்வத்தையும் கல்வியின் மூலம் பெற முடியும்'' என்ற கருத்தை வலியுறுத்தினர்.எஸ்.சி.எம்., குழும நிர்வாக இயக்குனர்கள் பரஞ்சோதி, நந்தகோபால், பரமசிவம், முதன்மை மார்கெட்டிங் அதிகாரி அருள் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ