| ADDED : ஜூலை 28, 2024 12:10 AM
''ஏய்... எல்லாரும் வீட்டுக்கு வெளியே வாங்கப்பா. இங்க வந்து பாருங்க, 'ஒட்டகம்' வந்திருக்கு. நம் ஏரியாவுக்கு பெரிசா வந்துருக்கு'' என ஒரு குழந்தை, மழலை குரலில் பிரண்ட்ைஸ கூப்பிட, அனைத்து குழந்தைகளும் வீதியில் ஆஜர்.ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒட்டகத்தை அழைத்து வந்திருந்த மஜ்ரூன் என்ற இளைஞர் ஒரு குழந்தையை வஞ்சையோடு அழைத்து ஒட்டகத்தின் மேல் உட்கார வைத்து, வீதி முழுதும் ஒரு ரவுண்ட் வந்து, இறக்கி விட்டார்.ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளையும் அழைத்து செல்ல, 'ரேட்' பேசினர். துவக்கத்தில், 80 ரூபாய் என ஆரம்பித்து, நிறைவில், 50 ரூபாய் என முடிவானது. இரண்டிரண்டு குழந்தைகளை ஒரு ரவுண்ட் அழைத்து சென்றார், அந்த வாலிபர்.ஒட்டகத்தின் மேல் அமர்ந்து கொண்டிருந்த குழந்தைகள் ஒரு வித பயத்துடன், மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பெற்றோர்களோ,' தங்கள் மொபைல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டனர். கூட்டம் அதிகமானது. ஒரு ரவுண்டுக்கு, ஐந்து குழந்தைகள் வரை அமர வைத்து, 250 ரூபாய் வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார், அந்த வாலிபர்.'ஒட்டகத்தை எப்படி இங்க கொண்டு வந்தீங்க. லாரில அதுவே ஏறி படுத்துக்கும்மா. நின்னுட்டே தான் வருமா, எத வேணும்னாலும் சாப்பிட்டுக்குமா. தண்ணியே குடிக்காம இருக்குன்னு சொல்றாங்க. அப்படியா' என அடுக்கடுக்கான கேள்விகளை பெற்றோர் இளைஞரிடம் கேட்டனர். அந்த வாலிபரோ, அடுத்த வீதிக்கு பயணமானார்.