உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்ஜின் டிரைவர் சாமர்த்தியம்: உயிர் தப்பிய முதியவர்

இன்ஜின் டிரைவர் சாமர்த்தியம்: உயிர் தப்பிய முதியவர்

திருப்பூர்:நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு, ஜெய்ப்பூர் - கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூர் வந்தது. பிளாட்பார்மில் இருந்து வெளியேறிய எக்ஸ்பிரஸ், வேகமெடுக்க ஆயத்தமான நிலையில், கல்லம்பாளையம் அருகே முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முற்படுவதை இன்ஜின் டிரைவர் பார்த்துள்ளார்.ரயில் புறப்பட்ட அடுத்த நிமிடம் என்பதால், சுதாரித்து ரயில் வேகத்தை குறைத்து, நிறுத்தினார்.அதற்குள் முதியவர் தண்டவாளத்துக்கு நடுவே படுத்துக் கொண்டார். ரயில் நின்றவுடன், இன்ஜினுக்கு அடியில் இருந்து வெளியேற முற்பட்ட வருக்கு, தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் முதியவர் சேர்க்கப்பட்டார்.ரயில்வே போலீசார் விசாரணையில், அந்நபர், திருப்பூர், ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த, பாலையா, 68 என்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை