உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி தீவிரம்

ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி தீவிரம்

கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, ஓட்டு எண்ணிக்கை மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்., 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு முடிந்தபின், அன்று இரவு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்படும்.இதற்காக, ஓட்டு எண்ணிக்கை மையத்தை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓட்டுப்பதிவு முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஏற்றிவரும் வாகனங்கள், சுலபமாக செல்ல, தற்காலிக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, கலெக்டர் அலுவலகம் - எல்.ஆர்.ஜி., கல்லுாரி இடையே உள்ள சுவர், இடிக்கப்பட்டு, பாதை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி