உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முருகு மெட்ரிக் பள்ளியில் புலிகள் தின கொண்டாட்டம்

முருகு மெட்ரிக் பள்ளியில் புலிகள் தின கொண்டாட்டம்

திருப்பூர்;திருப்பூர், பி.என்., ரோட்டில் உள்ள முருகு மெட்ரிக் பள்ளியில் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் பசுபதி, சசிகலா முன்னிலை வகித்தார். யு.கே.ஜி., மாணவர்கள் புலிகள் வேடமணிந்து உயிர் மற்றும் உணவு சங்கிலியில் புலிகள் முக்கிய பங்கு வகிப்பது குறித்து நாடகம் நடத்தினர். சில மாணவர்கள் தேசிய விலங்கான புலியை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி முதல்வர் சசிகலா, புலி வேடமணிந்து வந்த அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டினார். வாழ்த்து களையும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்