உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய தடகள விளையாட்டு போட்டி; திருப்பூர் வீராங்கனைக்கு வெள்ளி

தேசிய தடகள விளையாட்டு போட்டி; திருப்பூர் வீராங்கனைக்கு வெள்ளி

திருப்பூர்; தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்று திருப்பூர் வீராங்கனை ஸ்ரீவர்த்தினி, தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில், 38வது தேசிய விளையாட்டுப்போட்டிகள், உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன், ராய்ப்பூரில் உள்ள மஹாராணா பிரதாப் சிங் மைதானத்தில், கடந்த 8ல் துவங்கி 12 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் வீரர்கள், வீராங்கனைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.இதில், திருப்பூர் ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் வீராங்கனை ஸ்ரீவர்த்தினி, மகளிர் பிரிவின், 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்று, இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர், ஓட்ட துாரத்தை, 59.86 நொடிகளில் கடந்துள்ளார். தேசிய விளையாட்டுப்போட்டிகளில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து பங்கேற்று பதக்கம் வெல்வது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.உலக தடகள சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட 2025ம் ஆண்டுக்கான மகளிர் தரவரிசையிலும் திருப்பூர் வீராங்கனைஸ்ரீவர்த்தினி உலக அளவிலான தடகள தரவரிசையில் 10வது இடம், ஆசிய தடகளத் தரவரிசையில் 3வது இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.தேசிய தடகளத்தில் பதக்கத்துடன், சாதனைபடைத்த வீராங்கனை ஸ்ரீவர்த்தினி மற்றும் அவரது தடகளப் பயிற்சியாளர் அழகேசன் ஆகியோரை கொங்குநாடு விளையாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை