உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டி.கே.டி., குளோபல் பள்ளி மாணவன் - மாணவி சாதனை

டி.கே.டி., குளோபல் பள்ளி மாணவன் - மாணவி சாதனை

திருப்பூர்;இந்திய அளவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கதை எழுதுதல் போட்டியில், டி.கே.டி., குளோபல் பப்ளிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ பங்கேற்று, வெற்றி பெற்றார். மாணவியின் கதை தொகுப்பு சி.பி.எஸ்.இ., வலைதளத்தில் மின்புத்தகத்தில் வெளியிடப்பட உள்ளது.இப்பள்ளி பிளஸ் 2 மாணவர் கதிரேஷ், மாநில அளவில் நடந்த 'டெக் ஒலிம்பியாட்' போட்டியில் மூன்றாவது இடம் பெற்றுள்ளார். வெற்றி பெற்று, சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு டி.கே.டி., குழுமத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ