உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்பு

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 60வது வார்டில், பல்வேறு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது.மாநகராட்சிக்கு உட்பட்ட பெருந்தொழுவு ரோடு அண்ணா நகர் பகுதியில் மட்டும், அடுத்தடுத்து, ஐந்து இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது. தொடர்ந்து, குடிநீர் வெளியேறி வருவதால் பெருந்தொழுவு ரோடு பல இடங்களில் சேதமாகியுள்ளது. இதனால், ரோடு குண்டும், குழியுமாக மாறி, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி