உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊத்துக்குளி ரோடு ஸ்தம்பிப்பது ஏன்?

ஊத்துக்குளி ரோடு ஸ்தம்பிப்பது ஏன்?

திருப்பூர்:எடை போட வரும் சரக்கு லாரிகளால், ஊத்துக்குளி ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.திருப்பூர், ஊத்துக்குளி ரோடு நகரின் மிக முக்கியமான ரோடுகளில் ஒன்று. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், தலைமை போஸ்ட் ஆபீஸ், ஸ்டேட் வங்கி அலுவலகம், திருப்பூர் திருப்பதி பெருமாள் கோவில், குருவாயூரப்பன் கோவில், மருத்துவமனை, தனியார் வங்கிகள் என இந்த ரோட்டில் உள்ளன.ரயில்வே மேம்பாலத்தின் சுரங்க பாதை முடியும் இடத்தில் திருப்பூர் ரயில்வே கூட்ஸ் ெஷட் வளாகம் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சரக்கு ரயில் வாயிலாக கொண்டு வரப்படும் பொருட்கள் இங்கிருந்து லாரிகள் மூலம் உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.வாரத்தில் குறைந்தபட்சம், 5 நாள் என்ற அளவில், சரக்கு ரயில்களில் பொருட்கள் கொண்டு வந்து கையாளப்படுகிறது. சராசரியாக ஒரு சரக்கு ரயில் வரும் போது, 250 முதல் 300 லாரிகள் வரை இந்த சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றன.கடும் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் காணப்படும் இந்த ரோட்டில் சரக்கு லோடு ஏற்றிய லாரிகள் புறப்பட்டு ஊத்துக்குளி ரோட்டில், வாலிபாளையம் ரோடு அருகே, ரோடு அகலமாக உள்ள, பஸ் ஸ்டாப் பகுதியில் நிறுத்தி திருப்பப்படுகிறது.மூன்று ரோடுகளிலும் வரும் வாகனங்கள் நீண்ட நேரம் நின்று, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பயணிகள், மருத்துவமனை செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம், நோயாளிகளும் அவதிப்படுகின்றனர்.இதுதவிர, இந்த லாரிகள் டி.எம்.எப்., சுரங்கப் பாலத்தைக் கடந்து அருகேயுள்ள எடை மேடையில் எடை கணக்கிடவும், பல சமயங்களில் அங்குள்ள பங்க்கில் டீசல் நிரப்பவும் வரிசையாக நிறுத்தப்படுகிறது.இதற்காக வரிசை கட்டி நிற்கும் சரக்கு லாரிகளால் பாலம் மீது மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.----திருப்பூர், ரயில்வே கூட்ஸ்ெஷட்டிற்கு வரும் கனரக வாகனங்கள் ஊத்துக்குளி ரோட்டின் நடுவே திரும்புவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

தீர்வு அவசியம்

திருப்பூர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக தனியார் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இங்குள்ள ரயில்வே சரக்கு முனையத்தை நகருக்கு வெளியே, கூலிபாளையம் அல்லது வஞ்சிபாளையம் போன்ற பகுதிக்கு மாற்றம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.தற்காலிகமாக ரயில்வே கூட்ஸ் ெஷட் அமைந்துள்ள இடத்திலேயே லாரிகளுக்கு எடை மேடை அமைக்கப்பட்டால் இதுபோன்ற அசவுகரியம் குறையும். அதற்கான முயற்சியை மேற்கொண்டால், இப்பிரச்னை கண்டிப்பாக தீர்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை