பெண் அடித்து கொலை; வியாபாரிக்கு ஆயுள்
திருப்பூர்; பெண்ணை தலையில் அடித்துகொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.திருப்பூர், மண்ணரை, ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் செல்லமணி, 55. தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்துவந்தார். அங்கு கீரை வியாபாரம் செய்துவந்த நெல்லையை சேர்ந்த சேகர், 56, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தனி வீடு எடுத்து தங்கியுள்ளனர்.செல்லமணி வேறு நபருடன் மொபைல்போனில் பேசியது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015, டிச. 8 ம் தேதி, சேகர், செல்லமணியின் தலையில் அடித்து கொலை செய்தார். வடக்கு போலீசார், சேகரை கைது செய்து சிறையிலடைத்தனர்.வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட் நீதிபதி சுரேஷ், சேகருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ஜமீலாபானு ஆஜராகி வாதாடினார்.