விபத்தில் பெண் பலி
திருப்பூர்; திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜோதிநாதன் மனைவி வசந்தி, 65. இவரது மகன் பிரபாகரன், 30. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு இருவரும் தாராபுரத்தில் இருந்து பல்லடம் நோக்கி டூவீலரில் சென்றனர். பொங்கலுார் - புத்தரச்சல் அருகே அவ்வழியே வந்த கார் மோதியதில் அதே இடத்தில் பெண் பலியானார். பிரபாகரன் பலத்த காயமடைந்தார்.