உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் 108 திருவிளக்கு வழிபாடு

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் 108 திருவிளக்கு வழிபாடு

அவிநாசி; அவிநாசி அருகே ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டன், ஸ்ரீபுரம் ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடி மாத நிறைவு வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை வழிபாட்டுக்கு கோவை அமிர்தா ஆஸ்ரமம் சுவாமி நிகிலேஷா அம்ருத சைதன்யா தலைமை வகித்தார். கோவில் தலைமை அர்ச்சகர் வேத வியாஸ சாஸ்திரிகள் பூஜையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், 108 பெண்கள் குடும்பத்துடன் பங்கேற்று, திருவிளக்கு வழிபாடு செய்தனர். இதில் பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அர்ச்சிக்கப்பட்ட குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ