உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கே.எம்.சி.ஹெச் இலவச முகாமில் 111 பேருக்கு புற்றுநோய் சோதனை

கே.எம்.சி.ஹெச் இலவச முகாமில் 111 பேருக்கு புற்றுநோய் சோதனை

திருப்பூர்; கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில், புற்றுநோய் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை இலவச முகாம் திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமில், ரத்த சர்க்கரை அளவு, கர்ப்பப்பை வாய் பரிசோதனை, மார்பக பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆண், பெண் 111 பேர் பரிசோதிக்கப்பட்டனர். 'பரிந்துரைக்கப்படும் பிற பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில், சலுகை கட்டணத்தில் வழங்கப்படும்' என, மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ