உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 8 தொகுதியில் 23,82,820 வாக்காளர்; சுருக்கமுறை திருத்தம் துவங்கியது

8 தொகுதியில் 23,82,820 வாக்காளர்; சுருக்கமுறை திருத்தம் துவங்கியது

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எட்டு சட்ட சபை தொகுதிகளுக்கான வரைவு பட்டியலை, கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார்.டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயராமன், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுருக்க முறை திருத்தத்தின் ஒருபகுதியாக, மாவட்டத்தில், 2,520 ஆக இருந்த மொத்த ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 2,536 ஆக உயர்ந்துள்ளது.எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு பட்டியலில், 11 லட்சத்து 68 ஆயிரத்து 197 ஆண்கள்; 12 லட்சத்து 14 ஆயிரத்து 266 பெண்கள்; 357 திருநங்கைகள் என, மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 820 வாக்காளர் இடம் பெற்றுள்ளனர்.மாநகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளர் பார்வைக்காக, வரைவு பட்டியல் வைக்கப்படுகிறது.நேற்று துவங்கிய சுருக்கமுறை திருத்தம், வரும் நவ., 28ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 2025, ஜன., 1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள் மட்டு மின்றி, வரும் ஜூலை 1, அக்., 1 தேதிகளில் 18 வயது பூர்த்தியாவோரும், சுருக்கமுறை காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கத்துக்கும், சுருக்கமுறை திருத்தத்தில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதலாக18,703 வாக்காளர்

லோக்சபா தேர்தலுக்குமுன், கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 23 லட்சத்து 64 ஆயிரத்து 117 வாக்காளர் இடம்பெற்றிருந்தனர். கடந்த ஏழுமாதங்களில் 4,481 ஆண்; 4,834 பெண்; திருநங்கைகள் 10 பேர் என, 9,325 வாக்காளர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போதைய வரைவு பட்டியலில், 23 லட்சத்து 82 ஆயிரத்து 820 வாக்காளர் உள்ளனர். தொடர் திருத்த முறையில், வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கத்துக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் 18,703 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம்

ஓட்டுச்சாவடி மையங்களுக்குநேரில் செல்லாமலேயே,ஆன்லைனிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம். https://voters.eci.gov.inஎன்கிற இணையதளம்; Voter Helpline செயலி மூலமாக இருப்பிடத்தில் இருந்தபடியே, மிக சுலபமாக விண்ணப்பிக்கலாம்.

நான்கு சிறப்பு முகாம்

பணிக்கு செல்வோர் வசதிக்காக, வரும் நவ., மாதம் நான்கு விடுமுறை நாட்களில், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் சுருக்கமுறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. நவ., 16, 17 தேதிகள் மற்றும் 23, 24ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில், ஓட்டுச்சாவடி மையங்களுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கத்துக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை