உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதியவரை தாக்கி வழிப்பறி 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

முதியவரை தாக்கி வழிப்பறி 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

திருப்பூர்: பல்லடம் அருகே முதியவரை தாக்கி பணம் வழிப்பறி செய்த சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட மூன்று பேருக்கு தலா ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.பல்லடம் ஒன்றியம், சேடபாளையத்தைச் சேர்ந்த விவசாயி நடராஜன், 75. கடந்த 2021 ம் ஆண்டு தோட்டத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை, மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, மது பாட்டிலால் தாக்கி காயப்படுத்தி, 5 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அரவிந்த், 23, மோகன் பிரசாந்த், 26 மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.இவ்வழக்கு திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீவித்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் உதவி அரசு வக்கீல் பசீர் அகமது ஆஜரானார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை