உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னலுார் ஜல்லிக்கட்டில் 30 பேர் காயம்; ஒருவர் பலி

தென்னலுார் ஜல்லிக்கட்டில் 30 பேர் காயம்; ஒருவர் பலி

இலுப்பூர் : புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே தென்னலுார் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 9.00 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 730 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு, சிக்காது சீறிப்பாய்ந்து சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.வாடிவாசலிலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், பார்வையாளர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். சிகிச்சைக்காக, இலுப்பூர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பார்வையாளர் பகுதியில் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத, 45 வயது நபர் காளை முட்டி பரிதாபமாக இறந்தார். இலுப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை