உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சேவல் சண்டை; 5 பேர் கைது

சேவல் சண்டை; 5 பேர் கைது

திருப்பூர்; திருப்பூர் அருகே சேவல்களை வைத்து சூதாட்டம் நடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாநகராட்சி, 15 வேலம்பாளையம், காவேரி நகரில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட மகாராஜன், 31, செந்தில், 40, கார்த்திக், 28, அஸ்லாம், 23, கார்த்திக், 35, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, சூதாட்ட சண்டைக்கு பயன்படுத்திய ஐந்து சேவலை வேலம்பாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை