மேலும் செய்திகள்
மாணவர் மனதில் விழுந்த பசுமை விதை
16-Nov-2024
திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், சொக்கனுார், காட்டுப்பாளையம் கிராமத்தில், 5,184 சவுக்கு நாற்றுகள் நட்டு வைக்கப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், அரியவகை நாட்டு மரக்கன்றுகள் நட்டு, தமிழகத்தின் பாரம்பரிய மரத்தை பாதுகாக்கும் சேவையும் நடந்து வருகிறது. அழிவின் விளிம்பில் உள்ள மரங்களை காக்க, மரக்கன்றுகள் உற்பத்தி செய்வது, விவசாயிகளிடம் வழங்கி, நட்டு வளர்க்க ஊக்குவிக்கப்படுகிறது.அரியவகை மூங்கில்களை கொண்டு, திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான, இடுவாய் ஊராட்சியில் உள்ள இடத்தில், மாநகராட்சி அறிவியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், உப்பு தண்ணீர் உள்ள உவர் நிலத்திலும், அதிகப்படியான வருவாய் பெற, சவுக்கு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.இயற்கையை பாதுகாப்பது மட்டுமல்லாது, நிலையான வருவாய் பெறும் வகையில், பழவகை மரக்கன்றுகளும் நட்டு வளர்க்கப்படுகின்றன. 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், சவுக்கு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது அதிகரித்துள்ளது. திருப்பூர் ஒன்றியம், சொக்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பாளையம் கிராமம், ஆலாங்காட்டில், நேற்று சவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டது. பழனிசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 5,184 சவுக்கு நாற்றுகள் நடப்பட்டது. அவரது குடும்பத்தினர், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர், சவுக்கு நாற்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தனர்.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க ஆர்வமுள்ளவர்கள், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
16-Nov-2024