2 பேருக்கு 7 ஆண்டு சிறை
வெள்ளகோவில்: வெள்ளகோவிலை சேர்ந்தவர் பொன்னி, 45. தனது மகளை அழைத்துக்கொண்டு பள்ளியில் இருந்து, ஸ்கூட்டரில் வீடு திரும்பியுள்ளார். எதிரே பைக்கில் வந்த இருவர் பொன்னி அணிந்திருந்த ஐந்து சவரன் நகையை பறித்தனர்.வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிந்து, பழனியை சேர்ந்த விஜயகுமார், 28, கவியரசு, 24 ஆகியோரை கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் தலைமை குற்றவியல் கோர்ட் நீதிபதி செல்லத்துரை, இருவருக்கும், ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.