மேலும் செய்திகள்
என்.எம்.எம்.எஸ்., தேர்வு நாளை வரை அவகாசம்
28-Jan-2025
திருப்பூர்; அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு நாளை (22ம் தேதி) நடக்கிறது; மாவட்டத்தில், 7,046 பேர் தேர்வெழுத உள்ளனர்.மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஒன்பது முதல் பிளஸ் 2 வரை ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, 2024 டிச., 31ல் துவங்கியது; 2025 ஜன., 29 வரை அவகாசம் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இத்தேர்வெழுத, 7,046 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாவட்டம் முழுதும், 24 மையங்களில் நாளை (22ம் தேதி) தேர்வு நடக்கிறது. பள்ளிகள் செயல்படுமா?
பள்ளி கல்வித்துறையின் நாட்காட்டி அட்டவணையில், நாளை பள்ளி வேலை நாளாக உள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு நடக்க உள்ள நிலையில், 24 பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், நாளை பள்ளிகள் அனைத்தும் செயல்படுமா, விடுமுறை அளிக்கப்படுமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.இன்று தலைமை ஆசிரியர்களுக்கு இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
28-Jan-2025