உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓராண்டாகியும் ஓயாத பிரச்னை

ஓராண்டாகியும் ஓயாத பிரச்னை

பல்லடம்:பல்லடம் நகராட்சி, அண்ணா நகர் பகுதியில், அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. இவற்றில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளிக்கு மொத்தம் மூன்று வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.கழிப்பிட வசதி இல்லாமல், துவக்கப்பள்ளி குழந்தைகள் பயன்படுத்தி வரும் கழிப்பிடத்தையே, உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மாணவ, மாணவியருக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.உயர்நிலைப் பள்ளிக்கு மூன்று வகுப்பறைகள் மட்டுமே உள்ள நிலையில், கூடுதல் வகுப்பறைகளுடன், புதிய கட்டடம் கட்ட கடந்த ஓராண்டுக்கு முன் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், உயர்நிலைப்பள்ளி கட்டட கட்டுமான பணி கானல் நீராகவே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்