உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை ஆதார் பதிவு முகாம்

நாளை ஆதார் பதிவு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில், ஆதார் பதிவு மையங்கள் இயங்கி வருகின்றன. ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக, அனைத்து நாட்களிலும், ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி நடந்து வருகிறது. தொழிலாளர்கள் வசதிக்காக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், சுழற்சி முறையில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. நாளை (22ம் தேதி), காலை, 9:30 முதல், மாலை, 5:00 மணி வரை முகாம் நடக்கிறது. திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில், ஆதார் பதிவு முகாம் நடக்கிறது. உரிய கட்டணம் செலுத்தி, ஆதார் பதிவு மற்றும் புதுத்தல் பணிகளை செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ