உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழநிக்கு கூடுதல் பஸ்; பக்தர்கள் வலியுறுத்தல்

பழநிக்கு கூடுதல் பஸ்; பக்தர்கள் வலியுறுத்தல்

உடுமலை; தைப்பூச விழாவை முன்னிட்டு, உடுமலை வழியாக பழநிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கி, நெரிசலை தவிர்க்க வேண்டும், என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பழநி தண்டாயுதபாணி சுவாமிகள் கோவிலில், நடைபெறும் தைப்பூச விழா பிரசித்தி பெற்றதாகும். விழாவுக்கு, பாதயாத்திரையாகவும், பஸ்களிலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உடுமலை சுற்றுப்பகுதிகளில் இருந்து செல்கின்றனர்.பாதயாத்திரை பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்ப வரும் போது, போதிய பஸ்கள் இல்லாமல், தவிக்கின்றனர். இதே போல், விழாவுக்கு செல்பவர்களும், பஸ்களில் நெருக்கடியாக பயணித்து செல்ல வேண்டியுள்ளது.பழநியில் இருந்து பொள்ளாச்சி, கோவைக்கு இயக்கப்படும் பஸ்களில், உடுமலை பயணியரை ஏற்ற மறுக்கின்றனர். இதனால், குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழநிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.மேலும், பிற கிராம வழித்தடங்களிலும், சிறப்பு பஸ்கள் இயக்கினால், பக்தர்களும் பயன்பெறுவர். போக்குவரத்து கழகத்துக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். விழாவுக்கு பின், சில நாட்கள் கூடுதல் பஸ் சேவையை நீட்டித்தால் பயனுள்ளதாக இருக்கும், என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை