நிலுவை வழக்கு முடிக்க அட்வைஸ்
திருப்பூர்; இளம்சிறார் நீதிக்குழுமத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்ட இளம்சிறார் நீதிக்குழுமத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் நடந்தது. கூட்டத்துக்கு இளம்சிறார் நீதிக்குழுமத்தின் முதன்மை நடுவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சட்ட உறுப்பினர்கள் முருகேசன், மல்லிகா, அரசு வக்கீல் ஹேமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி இளம்சிறார் தொடர்பான, இரு ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. போலீஸ் உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குழந்தைகள் நலக்குழு, போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.