உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொன் காளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்க உறுதி ஏற்பு

பொன் காளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்க உறுதி ஏற்பு

பல்லடம்:பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த பொன் காளியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில் திருப்பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று கோவில் பிரதான வாயில் கதவு பொருத்தும் நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக, பொன் காளி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, பிரதான வாயில் கதவுகளுக்கு பூஜைகள் நடந்தன. தீபாராதனையை தொடர்ந்து, கதவு பொருத்தும் பணி துவங்கியது. தொடர்ந்து, விழா குழுவினர், பக்தர்கள் கும்பாபிஷேக விழா குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.அனைவரும் ஒருங்கிணைந்து கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கையாக, கோவிலுக்கு ராஜகோபுரத்தை அமைக்கவும், முன்னோர் பின்பற்றி வந்ததன் அடிப்படையில், பொன் காளியம்மனுக்கு தேர் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறுதி ஏற்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை