உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுாறு நாள் திட்ட சம்பள நிலுவை விவசாய தொழிலாளர் முற்றுகை

நுாறு நாள் திட்ட சம்பள நிலுவை விவசாய தொழிலாளர் முற்றுகை

திருப்பூர்: தேசிய வேலை உறுதி திட்டத்தில், கடந்த நான்கு மாதங்களாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. விரைவில் சம்பள நிலுவையை வழங்க வேண்டும்; அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று போராட்டம் நடந்தது.அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி, பி.டி.ஓ., விடம் மனு கொடுத்தனர். ஊத்துக்குளி ஒன்றிய அலுவலகம் முன், நேற்று காலை போராட்டம் நடந்தது. தாலுகா தலைவர் மணியன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், தாலுகா செயலாளர் கொளந்தசாமி, மா.கம்யூ., தாலுகா செயலாளர் சரஸ்வதி, விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பிரகாஷ், மாதர் சங்க செயலாளர் வண்ணக்கொடி உள் ளிட்டோர், கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.போராட்டத்தில், தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி, ஊத்துக்குளி பி.டி.ஓ., (கிராம ஊராட்சிகள்) சரவணனிடம் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை