மன மகிழ் மன்றங்களில் மது விற்பனை கூடாது!
திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், கரைப்புதுாரை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்று, கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூர் - பல்லடம் ரோடு, அருள்புரத்தில், எப்.எல்:2 அனுமதி பெற்ற இரண்டு மன மகிழ் மன்றங்கள் செயல்படுகின்றன. உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, விதிமீறி, இரவு, பகலாக அனைவருக்கும் மது விற்பனை செய்யப்படுகிறது. கரைப்புதுார் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில், மதுக்கடை செயல்படுத்த கூடாது என தீர்மானம் நிறைவேற்றியும், இவ்விரு மன மகிழ் மன்றங்களிலும் மது விற்பனை தொடர்ந்து நடக்கிறது.இந்நிலையில், டி.ஆர்.ஜி., திருமண மண்டபம் அருகிலும், தனியார் பள்ளி அருகிலும் புதிதாக மதுக்கடை திறக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. ஏற்கனவே இரண்டு மன மகிழ் மன்றங்கள் செயல்படும்நிலையில், புதிய மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்க கூடாது.இவ்வாறு, அதில் அவர்கள் கூறியுள்ளனர்.