உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

 கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

உடுமலை: உடுமலை கோட்ட கால்நடைத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம், மடத்துக்குளம் அருகேயுள்ள வேடபட்டியில் நடந்தது. திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சந்திரன் துவக்கி வைத்தார். துணை இயக்குநர் டாக்டர் சுகுமார், மழை காலம் மற்றும் வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை குறித்து விளக்கினார். உடுமலை கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் வெங்கடேசன், கால்நடை உதவி டாக்டர் கார்த்திகேயன் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர், 800க்கும் மேற்பட்ட கால்நடைகள், செல்லப்பிராணிகள் மற்றும் கோழிகளுக்கு உரிய சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர். முகாமில் சிறந்த கிடாரிக்கன்றுகள் வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை