உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அண்ணாதுரை பிறந்த நாள்; தி.மு.க., அ.தி.மு.க., கொண்டாட்டம்

அண்ணாதுரை பிறந்த நாள்; தி.மு.க., அ.தி.மு.க., கொண்டாட்டம்

திருப்பூர்; மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா நேற்று, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது. திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த விழாவில், ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் நாகராஜ், கவுன்சிலர்கள் செந்தில்குமார், முத்துக்கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். வடக்கு மாவட்ட தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், அண்ணாதுரை படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் நடராஜன், வடக்கு நகர செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட அ.தி.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரையின், 117வது பிறந்த நாள் விழா, கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.,கள் பழனிசாமி, நடராஜன் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் லோகநாதன், இலக்கிய அணி மாநில துணை செயலாளர் மணிவண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள் உட்பட, நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செய்தனர். மாவட்ட செயலாளர், அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ