உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.1.10 கோடி பறிப்பு வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்

ரூ.1.10 கோடி பறிப்பு வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்

திருப்பூர் : திருப்பூர் அருகே ரூ.1.10 கோடி பறிப்பு வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கரூர், கீழநஞ்சையை சேர்ந்தவர் வெங்கடேஷ், 60; நகை வியாபாரி. கடந்த, 4ம் தேதி மாலை கோவையில் நகை வாங்க கரூரில் இருந்து காரில் கிளம்பிய வெங்கடேஷ் மற்றும் கார் டிரைவர் ஜோதிவேல், 54 ஆகியோர் சென்றனர்.திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சம்பந்தம்பாளையத்தில் பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று திடீரென வழிமறித்தது. காரில் இறங்கிய, நான்கு பேர் தங்களை போலீஸ் என கூறி அறிமுகப்படுத்தி கொண்டு, கஞ்சா கடத்தப்படுவதாக காரை சோதனை செய்தனர்.இருவரையும் தாக்கி, மிரட்டி ஒரு கோடியே, 10 லட்சம் ரூபாய் மற்றும் மொபைல் போன்களை பறித்து சென்றனர். புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் விசாரித்தனர்.பணம் பறிப்பில் நகை வியாபாரி கார் டிரைவர் ஜோதிவேல், அவரது நண்பர் தியாகராஜன், 41, ஜாகீர் உசேன், 25, தினேஷ், 44 மற்றும் பிளஸ்2 மாணவர் உட்பட, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். மூளையாக செயல்பட்ட மேலும், இருவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று திருவள்ளூரை சேர்ந்த ஸ்டாலின் முத்து, 47 என்பவரை கைது செய்து, 1.43 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.இதுவரை, 97.96 லட்சம் ரூபாய், கார், மூன்று மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில், மேலும், ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ