உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யறீங்களா... இன்றும் - நாளையும் நடக்குது சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யறீங்களா... இன்றும் - நாளையும் நடக்குது சிறப்பு முகாம்

திருப்பூர் ; திருப்பூர் மாவட்டத்திலுள்ள 2,536 ஓட்டுச்சாவடி மையங்களிலும், இன்றும், நாளையும், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம்.வரும் ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளரை பட்டியலில் சேர்ப்பதற்கான சுருக்கமுறை திருத்தம் - 2025, கடந்த அக். 29ல் துவங்கி நடைபெற்று வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. வரைவு பட்டியலில், மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 820 வாக்காளர் இடம்பெற்றுள்ளனர். சுருக்கமுறை திருத்தத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி, மொபைல் என் உள்பட திருத்தங்களுக்கான படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இன்று சிறப்பு முகாம்

வேலைக்கு செல்வார் வசதிக்காக, இம்மாதம், இரண்டு கட்டங்களாக, நான்கு விடுமுறை நாட்களில், சுருக்கமுறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம் நடத்தப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்தது.அதன்படி, முதல் கட்டமாக, இன்றும், நாளையும், இரண்டாவது கட்டமாக, வரும் 23, 24 தேதிகளிலும் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளிலும் மொத்தமுள்ள 2,536 ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடைபெறும்சிறப்பு முகாமில் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வழங்கலாம்.இளையோரே கவனிங்க...வரும் ஜன., 1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளையோர், சுருக்கமுறை திருத்தத்தை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 2025 ஏப்., 1, ஜூலை 1 மற்றும் அக்., 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியாவோரும், பெயர் சேர்க்க இப்போதே விண்ணப்பிக்கலாம். அவர்களது பெயர், அந்தந்த காலாண்டுக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ