உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

 ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

பல்லடம்: பல்லடம் அடுத்த, மாதப்பூர் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில், ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் வேலுசாமி, வர்த்தக பிரிவு மாநில செயலாளர் தர்மராஜ் மற்றும் மாநில இளைஞரணி தலைவர் வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது: பல்லடம் நகராட்சியில் உள்ள, 18 வார்டுகளில், வார்டுக்கு ஒரு தலைவர், செயலாளர், பொருளாளர் நியமிக்க வேண்டும். அனைத்து வார்டிலும் கட்சியின் கிளை இருக்க வேண்டும். ஒன்றியத்தில் உள்ள கிராமங்களிலும், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு முன் நுாறு சதவீத கட்டமைப்பை ஏற்படுத்துவது அவசியம். அமைப்பு உறுதியாக இருந்தால்தான், கட்சியும் பலமாக இருக்கும். சமீப நாட்களாக, ஹிந்துக்களுக்கும், ஹிந்து மதத்துக்கும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஹிந்துக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுபோல், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உயிரிழந்த பூர்ண சந்திரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். நகர, ஒன்றிய பகுதிகளில், பொறுப்பாளர்களை நியமித்து, அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி