உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுமியிடம் அத்துமீறல்; தொழிலாளிக்கு 20 ஆண்டு

சிறுமியிடம் அத்துமீறல்; தொழிலாளிக்கு 20 ஆண்டு

திருப்பூர் : ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை சேர்ந்தவர் தேவராஜ், 50; கட்டட தொழிலாளி. கடந்த மார்ச் மாதம், ஒன்பது வயது பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். காங்கயம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர்.வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி ஸ்ரீதர், குற்றவாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ