உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போக்குவரத்து உதவி கமிஷனர் பொறுப்பேற்பு

போக்குவரத்து உதவி கமிஷனர் பொறுப்பேற்பு

திருப்பூர்; திருப்பூர் மாநகர போக்குவரத்து உதவி போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்று கொண்டார்.திருப்பூர் மாநகர போக்குவரத்து உதவி கமிஷனராக இருந்த திருநாவுக்கரசு, சமீபத்தில் கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அங்கிருந்த உதவி கமிஷனர் சேகர், திருப்பூர் மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று, உதவி கமிஷனர் சேகர், திருப்பூரில் பொறுப்பேற்று கொண்டார்.இவர் தான் பணிபுரியும் இடங்களில் ஏராளமான போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, உயரதிகாரிகளிடம் பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ